3.2 கோடி ஒளியாண்டு! சுருள் வடிவ கேலக்ஸியை துல்லியமாக படம்பிடித்தது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

LATEST NEWS

500/recent/ticker-posts

3.2 கோடி ஒளியாண்டு! சுருள் வடிவ கேலக்ஸியை துல்லியமாக படம்பிடித்தது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

பூமியிலிருந்து 3.2 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் M74 என்கிற சுருள் வடிவ பாண்டம் கேலக்ஸியை படம் எடுத்துள்ளது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. சூரியன் போன்ற நட்சத்திரங்களின் உருவாக்கம் இப்புகைப்படங்களில் தெளிவாக வெளிப்பட்டுள்ளதாக நாசா விளக்கம் அளித்துள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் கூர்மையான பார்வைத்திறனால் அந்த கேலக்ஸியின் மையத்தில் இருந்து வெளிவரும் பிரமாண்டமான சுழல் கரங்களில் வாயு மற்றும் தூசியின் மென்மையான இழைகளை துல்லியமாக படம்பிடித்திருக்கிறது.

பூமியை ஏறக்குறைய நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த பாண்டம் கேலக்ஸி, மின்னும் நட்சத்திரத்திரங்கள் உடைய நன்கு வரையறுக்கப்பட்ட சுழல் கரங்களுடன் காணப்படும். இதனால் விண்மீன் சுருள்களின் தோற்றம் மற்றும் கட்டமைப்பைப் படிக்கும் வானியலாளர்களுக்கு இது ஒரு விருப்பமான இலக்காக அமைகிறது. இதற்கு முன்பு இந்த கேலக்ஸியை பல தொலைநோக்கிகள் படம் எடுத்திருந்தாலும் தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்துள்ள படத்தில் தெளிவான பல தரவுகள் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

This image is divided evenly into 3 different views of the same region in the Phantom Galaxy. At left is an optical view taken by Hubble. Arms carved of brown filaments spiral out from a bright galactic core. The arms have pops of pink, which are star-forming regions, and there are blue stars throughout. The middle view contained combined Webb and Hubble data. Lacy red filaments spiraling out of the center of the galaxy are overlaid over a black field speckled with tiny blue stars. The red filaments contain pops of bright pink, which are star-forming regions. Lighter oranges in the red dust mean that dust is hotter. Heavier older stars closer to the center of the galaxy are cyan and green, and contribute to a greenish glow at the core. At right is a mid-infrared image from Webb. Delicate gray filaments spiral outwards from the center. These arms are traced by blue and bursts of pink, which are star-forming regions. A cluster of young stars glow blue at the very heart of the galaxy.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கடந்த வருடம் டிசம்பர் மாதம் விண்ணில் அனுப்பப்பட்ட நிலையில் ஜூலை 12ஆம் தேதி முதல் வண்ணப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. பேரண்டத்தின் வெவ்வேறு வகையான விண்மீன் கூட்டங்கள், தூசு மண்டலங்கள், கோள்கள் போன்றவற்றின் 8 புகைப்படங்களை வெளியிட்டு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/1JkM8u9
via IFTTT

Post a Comment

0 Comments