தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் இயற்கை உரம் என்ற பெயரில் களிமண்ணை விற்று விவசாயிகளை ஒரு கும்பல் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், புரட்டாசி ராபி பருவத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அடி உரமான டிஏபிக்கு இணையாக தங்களிடம் இயற்கை கடல் பாசி உரம் இருப்பதாக ஒரு கும்பல் விவசாயிகளை அணுகியுள்ளது.
50 கிலோ கொண்ட அந்த உர மூட்டை ரூ1,300 எனக் கூறப்பட்டுள்ளது. இதனை நம்பி கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அந்த உர மூட்டையை வாங்கியுள்ளனர்.
பின்னர் மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்தபோது, உரத்திற்குப் பதிலாக வெறும் களிமண் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த விவசாயிகள், போலி உரம் விற்ற நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு போதுமான உரங்களை கையிருப்பில் வைத்து வழங்கினால், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments