இரண்டாவது கட்டத்தில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடங்கி விட்டது. இதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கடந்த 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் இந்தத் தடுப்பூசி குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும், அச்சமும் நிலவி வருகிறது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி எடுத்துக்கொண்டு நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் பிரதமர் மோடி, மாநிலங்களின் முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், காவல், வருவாய் மற்றும் துப்புரவுத் துறை பணியாளர்கள் ஆகியோருக்கும் இரண்டாவது கட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3sTyuHg
via IFTTT
0 Comments