ப்ளாக்கர் என்பது கூகிள் நமக்கு கொடுக்கும் நல்ல வருமான வாய்ப்பு இதை பயன்படுத்தி நாம் எப்படி வருமானம் பார்ப்பது என்பதை பார்ப்போம் .
முதலில் பிளாக்கர் உருவாக்க நமக்கு ஒரு ஜிமெயில் தேவை. நம்மிடம் இப்பொழுது அனைவரிடம் ஸ்மார்ட்போன் உள்ளது அதை இயங்க செய்ய ஜிமெயில் கண்டிப்பாக இருக்கும் . ஆகவே அதை பயன்படுத்தலாம் இல்லையென்றால் நாம் உருவாக்கும் பிளாக்கர் பெயரிலும் ஒரு ஜிமெயில் அக்கௌன்ட் உருவாக்கியும் பிளாக்கர் உள்ளே லொகின் செய்து உள்நுழையலாம் .
இப்பொழுது நாம் பிளாக்கர் உள்ளே சென்றவுடன் தலைப்பு கேட்க்கும்,நாம் கொடுக்கும் தலைப்பே நமது பிளாக்கர் வெப்சைட்டின் சிறந்த பெயராக இருக்கும் ஆகவே நாம் கொடுக்கும் தலைப்பு எளிதில் அனைவரிடமும் சென்றடையும் வகையில் இருக்க வேண்டும். உதாரணமாக amazon என்னும் தலைப்பு இப்பொழுது மக்களிடம் எளிதில் சென்றடைந்திருக்கிறது .அதுபோல உங்கள் பிளாக்கர் வெப்சைட் தலைப்பு இருக்க வேண்டும்
பிறகு தலைப்பிற்கு தகுந்த ப்ளாக்கர் வெப்சைட் முகவரி கொடுக்கவும் உதாரணமாக amazon@blogspot.com. இப்பொழுது ப்ளாக்கர் உருவாகிவிட்டது அடுத்ததாக உங்கள் ப்ளாக்கர் வெப்சைட் திரையில் நாம் கொடுத்த தலைப்பு வரும்.பிறகு கீழுள்ள options உங்களுக்கு தெரியும்
இந்த பகுதியில் நீங்கள் சொல்ல வரும் விஷயத்தை ஒரு நல்ல தலைப்புடன் தொடங்கவும். பிறகு உங்கள் content எழுதவும். இந்த பகுதியில் உங்கள் கருத்துக்கள் மட்டுமில்லாமல் புகைப்படமும் சேர்க்கலாம்.மேலேயுள்ள வலதுபுறம் பப்லிஸ் என்று இருக்கும் உங்கள் பதிவு ப்ளாக்கரில் பதிவாகிவிடும் இதில் பக்கத்திலேயே preview இருக்கும் அதை கிளிக் செய்தால் நீங்கள் போட்ட பதிவு எப்படி இருக்கிறதென்று காணமுடியும்
இந்த பகுதியில் நீங்கள் பதிவு செய்த அனைத்து போஸ்ட்டும் இருக்கும் நீங்கள் ஏதாவது பதிவில் மேலும் பதிவு செய்ய நினைத்தால் அதை மீண்டும் சரிசெய்ய முடியும்
இந்த பகுதியில் நீங்கள் பதிவு செய்த அனைத்து போஸ்ட்டும் எவ்வாறு மக்களிடத்தில் சென்றடைந்தது என்று காண முடியும். எந்த நாடுகளில் எவ்வளவு மக்கள் உங்கள் ப்ளாக்கர் காண்கின்றனர் என்று நாம் பார்க்க முடியும்.
இந்த பகுதியில் நீங்கள் பதிவு செய்த அனைத்து போஸ்ட்டும் எவ்வாறு மக்களிடத்தில் வரவேற்பை பெறுகிறது என்பதை நாம் காண முடியும். மக்களின் கருத்துக்கள் இங்கே பதிவு செய்வர் உங்களின் கன்டென்ட் எவ்வாறு உள்ளது என்பதை உங்களால் உணர முடியும் மேலும் நல்ல பதிவுகளை நீங்கள் கொடுக்க நல்ல உந்துதலையும் ஊக்கத்தையும் கொடுக்கும்.
இந்த பகுதியில் நீங்கள் பதிவு செய்த அனைத்து போஸ்ட்டும் Adsense மூலம் அங்கீகரிக்கப்பட்டு உங்களின் வருமானத்தை ஈட்டுவதற்கு இந்த பகுதி முக்கிய பங்கு வகிக்கும். ஆகவே சிறந்த பதிவுகளை பதிவிடுங்கள்.
connect your blog to AdSense என்று இருக்கும் அதை கிளிக் செய்து AdSense அக்கௌன்ட் துவங்கிக்கொள்ளுங்கள். உங்களின் முழு முகவரி, வங்கி அக்கௌன்ட் எண் , தொலைபேசி எண் அனைத்தையும் சரியாக கொடுக்கவும்
இந்த பகுதியில் நீங்கள் முக்கியமாக கவனிக்கவேண்டியது அவசியம். இந்த பகுதிதான் உங்களின் ப்ளாக்கரின் தரம் எப்படி என்பதை நிர்ணயிக்கும்.ஆகவே நீங்கள் இங்கே 5 முக்கியமான பேஜை உருவாக்கவேண்டும். முதலில்
1 ) ABOUT US உங்களை பற்றிய தகவல், ப்ளாக்கர் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதை தெரிவிப்பதன் மூலம் உங்களின் ப்ளாக்கரின் தரம் மதிப்பிடப்படும்.
2 ) SITEMAP உங்கள் ப்ளாக்கர் எப்படி அமைந்திருக்கறது என்பதை உறுதிப்படுத்தும்.
3 ) TERMS and CONDITIONS உங்களின் ப்ளாக்கர் பற்றிய தரத்தை இதுவும் உறுதிப்படுத்தும்
4 ) PRIVACY POLICY உங்களின் ப்ளாக்கர் பற்றிய தரத்தை இதுவும் உறுதிப்படுத்தும்
5 ) DISCLIMER உங்களின் ப்ளாக்கர் பற்றிய தரத்தை இதுவும் உறுதிப்படுத்தும்
இந்த பகுதியில் உங்கள் ப்ளாக்கரின் டெம்ப்ளட் வரிசைப்படுத்த முடியும். இதன் மூலம் உங்கள் ப்ளாக்கர் அழகாகவும்,கவர்ச்சிகரமாகவும் உருவாக்கமுடியும்.
இந்த பகுதியில் உங்கள் டெம்பிளேட் மாற்றமுடியும. அதற்குண்டான தீம் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நாம் அதை பயன்படுத்தி ப்ளாக்கரை அழகாகவும்,கவர்ச்சிகரமாகவும் உருவாக்கமுடியும்.
இந்த பகுதி உங்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. இதில் உங்கள் தலைப்பு , உங்களின் ப்ளாக்கர் எதைப்பற்றியது என்பதை மறுஆய்வு செய்யமுடியும். மேலும் இந்த பகுதியில் நீங்கள் உங்கள் ப்ளாக்கரை ஒரு அழகான கவர்ச்சிகரமான வெப்சைட் போல வடிவமைக்கவும் இந்த பகுதி செயல்படுகிறது. மேலும் கூகுளை நேரடியாக சென்றடைய பயன்படுகிறது. மக்களிடத்தில் உங்கள் ப்ளாக்கரை பரப்புவதற்கும் பயன்படும் .
இந்த பகுதியில் உங்கள் சந்தேகங்களை பார்வையிட முடியும்.பயனுள்ளதாகவும் இந்த பகுதி அமைந்துள்ளது. உங்களுக்கு தேவையான அனைத்தும் உள்ளது. படித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பகுதியில் உங்கள் ப்ளாக்கர் எப்படி இருக்கிறது, என்னென்ன பதிவுகளை நாம் upload செய்திருக்கிறோம், நம் ப்ளாக்கர் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறதா என்பதை நீங்கள் கண்டறியலாம் .
என்னுடைய இந்த பதிவை வாசித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி !!!
மேலும் தங்களின் பேராதரவை நம்முடைய தமிழ் விழி ப்ளாக்கருக்கு தருமாறு
கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி !!! நன்றி !!! நன்றி !!!
0 Comments