ஜோ பைடன் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, நிலவிலிருந்து எடுத்து வரப்பட்ட 3.9 பில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு சிறிய பாறையை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்க நாசா ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுக் கொண்ட ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கியுள்ளார். இந்நிலையில் ஜோ பிடன் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று 1972-ம் ஆண்டில் நிலவிலிருந்து எடுத்து வரப்பட்ட 332 கிராம் எடையுள்ள ஒரு சிறிய பாறையை ஓவல் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்க நாசா ஒப்புதல் அளித்துள்ளது. இது 3.9 பில்லியன் ஆண்டுகள் பழமையான மாதிரியாகும். இந்த துண்டு நிலவின் அருகாமையில் கடைசியாக பெரிய தாக்க நிகழ்வின் போது உருவாக்கப்பட்டது என ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டது.
நிலவில் காலடி வைத்த கடைசி மனிதர்களான அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள், இந்த மாதிரியை நிலவின் டாரஸ்-லிட்ரோ பள்ளத்தாக்கிலுள்ள வடக்கு மாசிஃப்பின் அடிவாரத்தில் உள்ள ஒரு பெரிய கற்பாறையிலிருந்து கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய தலைமுறையினரின் லட்சியங்கள் மற்றும் சாதனைகளை அடையாளமாக அங்கீகரிக்கும் விதமாக நிலவின் பாறை இப்போது ஓவல் அலுவலகத்தில் வைக்கப்படுகிறது எனவும் அமெரிக்காவின் தற்போதைய சந்திரன் முதல் செவ்வாய் கிரக ஆய்வு வரை அனைத்திற்கும் ஆதரவளிக்கும் வகையில் இது இருக்கிறது.
ஜோ பைடன் பதவியேற்ற நிலையில், முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட நாசாவின் தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் அமெரிக்க விண்வெளி அமைப்பின் நிர்வாகி என்ற பதவியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகினார். தற்போது நாசா நிர்வாகி பணியிடத்தை நிரப்ப அதிபர் பைடன் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2Y8qwMi
via IFTTT
0 Comments