“விரைவில் நலம் பெறு டீம் இந்தியா” - மைதானத்தில் பதாகையை தாங்கிய இந்திய கிரிக்கெட் ரசிகை!

LATEST NEWS

500/recent/ticker-posts

“விரைவில் நலம் பெறு டீம் இந்தியா” - மைதானத்தில் பதாகையை தாங்கிய இந்திய கிரிக்கெட் ரசிகை!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மூன்றாவது போட்டி சமனில் முடிந்தது.

நான்காவது போட்டி காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 54 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் இரண்டு நாள் ஆட்டம் எஞ்சியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின்போது போட்டியை பார்க்க வந்திருந்த இந்திய ரசிகை ஒருவர் “விரைவில் நலம் பெறு டீம் இந்தியா” என்ற பதாகையை தாங்கிப் பிடித்திருந்தார்.

image

இந்தத் தொடரின் ஆரம்பம் முதலே வீரர்களின் காயம் இந்திய அணிக்கு பெருத்த சோதனையாக அமைந்துள்ளது. அது தான் அந்த ரசிகை அப்படியே பதாகையை தாங்கவும் காரணம்.

டெஸ்ட் தொடர் ஆரம்பவதற்கு முன்னரே இஷாந்த் ஷர்மா வெளியேறினார். தொடக்க வீரர் ரோகித் ஷர்மா ஒருநாள் மற்றும் டி20 தொடரை முழுவதுமாக மிஸ் செய்தார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடாத அவர் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ஷமி முதல் போட்டியிலும், உமேஷ் யாதவ் இரண்டாவது போட்டியிலும், கே.எல். ராகுல் மூன்றாவது போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாகவும், ஜடேஜா, விஹாரி, பும்ரா மற்றும் அஷ்வின் மூன்றாவது போட்டியின்போதும் காயம் அடைந்ததால் தொடரிலிருந்து வெளியேறினர். தற்போது நடைபெற்று வரும் நான்காவது டெஸ்டில் மயங்க் அகர்வால், வாஷிங்டன் சுந்தர், நடராஜன் மற்றும் ஷர்துல் தாக்கூர் இந்திய அணியின் இடம் பெற்றுள்ளனர். நான்காவது போட்டியில் சைனி கூட பந்து வீசியபோது கால்களை பிடித்த படி மைதானத்த்திலிருந்து வெளியேறி உள்ளார். 

இந்தத் தொடர் முடிந்ததும் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. அதனால் இந்திய வீரர்கள் காயத்திலிருந்து விரைவாக மீண்டு வர வேண்டுமென்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேதான் அந்த ரசிகையின் கோரிக்கையும். இந்தியாவுக்கு அனைத்தும் ஆல் இஸ் வெல்லாக அமையும் என நம்புவோம்.

படம் : நன்றி - கிரிக்கெட் ஆஸ்திரேலியா 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2XLA4fZ
via IFTTT

Post a Comment

0 Comments