’#பொங்கல்வாழ்த்துக்கள்’ தமிழ் ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழகத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று பொங்கல் பண்டிகை. தமிழர் திருநாளாம் தைத்திங்களன்று தமிழர்கள் அனைவரும் பொங்கல் வைத்து கொண்டாடுவதுடன், அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதும் வழக்கம்.
இந்த ஆண்டு பொங்கல் தினத்துக்கு உலக மற்றும் தேசியத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில், ஆங்கிலம் மற்றும் தமிழில் #HappyPongal மற்றும் #பொங்கல்வாழ்த்துக்கள் என்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. இதில் சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தமிழர்களும் பொங்கல் வைத்து கொண்டாடும் புகைப்படங்களும், வாழ்த்துகளும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஆங்கில ஹேஷ்டேக் மூன்றாம் இடத்திலும், தமிழ் ஹேஷ்டேக் நான்காம் இடத்திலும் உள்ளது.
இந்தியாவிலுள்ள மற்ற மாநிலத்தவரும், பிற நாடுகளிலுள்ளவர்களும் இந்த ஹேஷ்டேகுகளைப் பயன்படுத்தி தமிழர்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் #பொங்கல்வாழ்த்துக்கள் என்ற ஹேஷ்டேக் நான்காம் இடத்தில் உள்ளபோதிலும், சென்னை ட்ரெண்டிங்கில் இந்த ஹேஷ்டேக் இடம்பெறாதது ஏன் என்று ட்விட்டர்வாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3oHHAEx
via IFTTT
0 Comments