வெண்ணிலா கபடி குழு, ஜீவா, சிலுக்குவார்பட்டி சிங்கம், ராட்சசன் படங்கள் மூலம் பிரபலமடைந்த நடிகர் விஷ்ணு விஷால் சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் சங்கத்தின் செயலாளர் ரங்க பாபு என்பவர் கூடுதல் ஆணையரிடம் விஷ்ணு விஷால் தினமும் குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுவதாக புகார் ஒன்றை அளித்தார்.
அவர் அளித்த புகாரில், இன்று அதிகாலை அதிக சத்தத்துடன் விஷ்ணுவிஷால் தங்கியிருக்கும் வீட்டில் இருந்து சத்தம் வந்த நிலையில், அது தொடர்பாக அவரிடம் கேட்க சென்ற போது அவர் கதவை திறக்க மறுத்து விட்டார். இதனையடுத்து நான் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்ததின் அடிப்படையில் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்தனர். காவல்துறையினர் வந்த பிறகும் கூட விஷ்ணு முறையாக பதிலளிக்காமல் தகாத வார்த்தைகளால் எங்களைத் திட்டினார்.
காவல்துறை அதிகாரியின் மகன் என்கிற அடிப்படையில் சட்டத்தை மீறி இதுபோன்று தொடர்ந்து அவர் செய்து வருகிறார்.அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தைகள்,உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானோர் வசித்து வரும் நிலையில், தொந்தரவு அளிக்கும் வகையில் நள்ளிரவு நேரங்களில் தொடர்ந்து பல்வேறு நபர்கள் விஷ்ணு விஷால் வீட்டிற்கு வந்து மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் செயல்படுகின்றனர். ஆகவே காவல்துறையினர் நடிகர் விஷ்ணு விஷால் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் விஷ்ணு விஷாலிடம் கேட்ட பொழுது, “நான் இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகி உள்ளன. நான் இரவு நேரங்களில் படப்பிடிப்பிற்கு செல்லும்பொழுது குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என அடுக்குமாடி நிர்வாகம் கூறுகின்றனர். என்னை காலி செய்ய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தகைய பொய்யான குற்றச்சாட்டை என் மீது அவர் வைத்துள்ளார்.
நான் குடித்துவிட்டு எதையும் பேசவில்லை. ஒரு படத்தில் சிக்ஸ் பேக் வைத்து நடிக்கக்கூடிய காட்சிகள் இருப்பதால் நான் இரண்டு மாத காலமாக குடிக்கவில்லை.” என்றார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/398a1Gi
via IFTTT
0 Comments