தோனி தனது தோட்டத்தில் ஸ்டாபரியை விளைவித்து சாப்பிடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற தோனி, தற்போது விவசாயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக ராஞ்சியில் இருக்கும் தனது வீட்டில் 10 ஏக்கரில், பிரேத்யமாக நிலத்தை ஒதுக்கி விவசாயம் செய்து வரும் தோனி தக்காளி, முட்டைக்கோஸ், பட்டாணி உள்ளிட்ட பல வகை காய்கறிகளை விளைவிக்கிறார். இந்தக் காய்கறிகள் ஜார்கண்ட்டின் உள்ளூர் தேவைக்காக கொண்டு செல்லப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இது மட்டுமன்றி இந்தக் காய்கறிகள் அரபு நாடுகள் மட்டுமனறி பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தோனி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது பண்ணைத் தோட்டத்தில் விளைவித்த ஸ்டாபரியை சாப்பிடுவது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது தோட்டத்தில் விளைவித்த ஸ்டாபரியை கடித்து சாப்பிடும் தோனி, தான் தொடர்ந்து பண்ணைக்குச் சென்றால் தோட்டத்தில் ஒரு ஸ்டாபரி கூட மிஞ்சாது என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தோனி பதிவிட்ட ஒரு மணி நேரத்தில், 2 மில்லியனை பார்வையாளர்களை தாண்டியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments