"தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. யார் வந்தாலும், வராவிட்டாலும் எந்த தாக்கமும் ஏற்படாது. 4 ஆண்டுகள் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்போம், மக்கள் அதற்கான அங்கீகாரத்தை தருவார்கள்" என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த பின் புதிய தலைமுறையிடம் பேசினார். அப்போது, "அதிமுக விலக்கி அமைக்கும். தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ஸ்டாலின் எந்த நாட்டில் நடப்பதை சொல்கிறார் என்று தெரியவில்லை புதிய நீதிபதி ஆற்றிய உரையும் ஸ்டாலினுக்கு பதிலாக அமையும்" என தெரிவித்தார்.
மேலும், “பொது குழு கூடியதற்கும், சசிகலா வருகைக்கும் சம்மந்தம் இல்லை. வழக்கத்திற்கு மாறாக இந்தமுறை காலதாமதமாக தான் நடந்துள்ளது. மனதாலும், ஆன்மாவாலும் அதிமுக ஒன்றுப்பட்டு நிற்கிறது. பிரிவினை விதையை யார் தூவினாலும் மக்களால் புறந்தள்ளப்படுவர். மக்கள் தொடர்புடன் அதிமுக எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்கிறது. தமிழகத்தில் 99.5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். சசிகலா வந்தாலும் வராவிட்டாலும் எந்த தாக்கமும் ஏற்படாது. கடந்த 4 ஆண்டுகளில் என்ன செய்தோம் என்ற சாதனையை வைத்து வாக்கு கேட்போம். மக்கள் மிகப்பெரிய அங்கீகாரத்தை தருவார்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments