வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனர்களின் இருப்பிடம் உட்பட சில தனிப்பட்ட விவரங்களை கேட்டு வருகிறது. அதை கொடுக்காத பயனர்களின் கணக்குகள் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதியோடு முடக்கப்படும் எனவும் தகவல் வருகின்றன. அப்படி கொடுக்கப்படுகின்ற தகவல் ஃபேஸ்புக் தளத்தில் பகிரப்படும்.
இந்நிலையில் வாட்ஸ் அப் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்ட நொடி முதலே நெட்டிசன்கள் பலரும் வாட்ஸ் அப் மற்றும் அதன் கூட்டு நிறுவனமான ஃபேஸ்புக்கை TROLL செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெலிகிராம் நிறுவனமும் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கின் புதிய பிரைவசி பாலிசியை கிண்டல் செய்துள்ளது. குறிப்பாக அதை ட்வீட் செய்து சொல்லி வருகிறது. “டெலிகிராம் ஏன் பிரசித்தி பெற்ற அப்ளிகேஷனாக உள்ளது என்பதை அறிய ஃபேஸ்புக் நிறுவனம் தனியாக ஒரு குழுவை அமைத்துள்ளதாக கேள்விப்பட்டேன். அது ஏன் என்பதை நானே சொல்லி விடுகிறேன். உங்களது பணமாவது மிச்சமாகட்டும். உங்களது பயனர்களுக்கு மதிப்பு கொடுங்கள்” என சொல்லியுள்ளார் டெலிகிராமின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் டுரோவ்.
அதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டெலிகிராம் டிரெண்டாகி வருகிறது...
— Telegram Messenger (@telegram) January 8, 2021
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments