நான் தமிழன் இல்லை, ஆனால் தமிழை மதிக்கிறேன். தமிழை மத்திய அரசும், மோடியும் அவமதிப்பதை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஈரோடு அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “ நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன், நான் தமிழன் இல்லை, ஆனால் தமிழை மதிக்கிறேன். தமிழை மத்திய அரசும், மோடியும் அவமதிப்பதை ஏற்க முடியாது. டெல்லியில் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழக கலாச்சாரத்தை மதிக்கவில்லை.
இந்தியாவில் மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் தமிழகத்தை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும். மத்தியில் ஆட்சி செய்பவர்கள் தமிழில் பேசி ஏமாற்றலாம் என நினைக்கிறார்கள். ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை உயர்வு தமிழக மக்களை வெகுவாக பாதிப்படைய செய்துள்ளது” என தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய பரப்புரையின் தமிழ், தமிழர் கலாசாரம் உள்ளிட்டவை குறித்து தொடர்ச்சியாக பேசி வருகிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3qM3Kpx
via IFTTT
0 Comments