மறைந்த டாக்டர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அப்போலோ மருத்துவமனையில் இதயநோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்று வந்த, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தா, மூச்சுத் திணறல் காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 93. மருத்துவர் சாந்தாவின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புற்றுநோயாளிகளின் நம்பிக்கை ஒளியாக பிரகாசித்த டாக்டர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் செவிலியர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.
முன்னதாக, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தாவின் பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும் அளவுக்கு தமிழக அரசால் அங்கீகரிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் சாந்தா அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களைச் சந்தித்த போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2KtKoWV
via IFTTT
0 Comments