வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி

LATEST NEWS

500/recent/ticker-posts

வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி

வேளாண் சட்டங்களை தற்காலிகமாக அடுத்த ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைக்க தயார் என விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளிடம் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் இன்று நடைபெற்ற 10ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனையடுத்து, ஜனவரி 22 ஆம் தேதி விவசாயிகளுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று பத்தாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையில் 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அரசு சார்பில் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சருடன் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

image

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார் வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர். இதையடுத்து பேச்சுவார்த்தை விக்யான் பவனில் தொடங்கி நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் பொழுது டிராக்டர் பேரணி தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் ஆலோசித்தார். அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே இந்த சட்டங்களை அமல்படுத்துவதற்கு தடை விதித்திருக்கிறது. மேலும் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர குழு ஒன்றையும் அமைத்து இருக்கிறது. இந்தக் குழு தன்னுடைய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கிட்டத்தட்ட பல மாதங்கள் ஆகும். எனவே அதுவரை வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை நாங்கள் நிறுத்தி வைக்கிறோம். மேலும் சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் தயாராக இருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து 7.30 மணி அளவில் பேச்சுவார்த்தை என்பது முடிவுக்கு வந்தது. மேலும் மத்திய அரசு எடுத்துரைத்த அம்சங்கள் குறித்து நாளை வேளாண் சங்க பிரதிநிதிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுடன் கலந்தாலோசித்து அறிவிப்பதாக விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மத்திய அரசிடம் தெரிவித்தன. இதையடுத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டது.

image

பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்க பிரதிநிதிகள் மத்திய அரசு வேளாண் சட்டங்களை ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்தி வைப்பதாக தெரிவிக்கிறது. இது தொடர்பாக நாளை முக்கிய கூட்டம் நடத்தி ஆலோசித்து நாளை மறுநாள் நடைபெறும் 11-ஆவது கட்ட பேச்சு வார்த்தையின்போது தெரிவிக்கப்படும் என அறிவித்தனர்.

மேலும் பேச்சுவார்த்தை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ஒன்றரை வருடங்கள் வரை சட்டங்களை நிறுத்தி வைக்க தயார் என அரசு விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கு தெரிவித்துள்ளது. அரசின் இந்த பரிந்துரை குறித்து ஆலோசனை செய்து முடிவு நாளை இறுதி செய்வதாக விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தையில் தற்பொழுது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/35Y6kkk
via IFTTT

Post a Comment

0 Comments