அமெரிக்கா: இஸ்லாமிய நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த தடையை நீக்க பைடன் முடிவு

LATEST NEWS

500/recent/ticker-posts

அமெரிக்கா: இஸ்லாமிய நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த தடையை நீக்க பைடன் முடிவு

கால நிலை  மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் சேர அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதேபோல இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் நாடுகளிலிருந்து மக்கள் வர பிறப்பித்திருந்த தடையையும் நீக்க முடிவு செய்துள்ளார் ஜோ பைடன். அவர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் கையெழுத்திட  உள்ள முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்று என சொல்லப்படுகிறது. 

வெள்ளை மாளிகையில் அதிபராக அரியணை ஏறியதும் முன்னாள் அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த சர்ச்சைக்குரிய கொள்கை முடிவுகளை பின்வாங்கவும் பைடன் முடிவு செய்துள்ளதாக அவரது அலுவலக ஊழியர் தெரிவித்துள்ளார். 

image

கொரோனா நெருக்கடி, இனவெறி சர்ச்சை, பொருளாதார நெருக்கடி, மாறிவரும் காலநிலை நெருக்கடி ஆகிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்த பைடன் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. அதே போல கடந்த 2017-இல் இஸ்லாம் மக்கள் அதிகம் வாழும் ஏழு நாடுகளிலிருந்து மக்கள் வர ட்ரம்ப்  பிறப்பித்திருந்த தற்காலிக தடையையும் நீக்க பைடன் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.   

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3oVSjer
via IFTTT

Post a Comment

0 Comments