தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

LATEST NEWS

500/recent/ticker-posts

தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழக, ஆந்திரா இடையே பேருந்துகள் இயக்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் காலாவதி ஆகி விட்டதால் தமிழக அரசு பேருந்துகளை ஆந்திர அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

கரூரில் இன்று கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்துபிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஆந்திர மாநிலத்தில் தமிழக போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 16 பேருந்துகளை அங்குள்ள அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல ஆந்திர பேருந்துகளும் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

image

ஆந்திரா-தமிழக மாநிலங்களுக்கிடையே பேருந்துகளை இயக்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளதால் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பேருந்துகள் இன்று விடுவிக்கப்படும், அந்த ஒப்பந்தங்களும் புதுப்பிக்கப்படும். பொங்கல் பண்டிகையின்போது அரசு போக்குவரத்து கழகம் மிக குறைந்த வருவாய் ஈட்டியுள்ளது. கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்த வருவாய் குறைந்துள்ளது.

இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த  மாநிலமாக தமிழகம் உள்ள நிலையில், தமிழகத்திலேயே கொரானா வைரஸ்  குறைந்த அளவில் பாதித்த மூன்று மாவட்டங்களில் ஒன்றாக கரூர் உள்ளது” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2LAQkOc
via IFTTT

Post a Comment

0 Comments