ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்காக பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையிலிருந்து டெல்லி செல்ல இருக்கிறார். இதனிடையே இன்று இரவு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவருடைய இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இதற்காக தலைநகர் டெல்லியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வருடன் தலைமைச்செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகளும் டெல்லி செல்ல இருக்கிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
மாலை 3 மணி அளவில் டெல்லி செல்லும் தமிழக முதல்வருக்கு விமான நிலையத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க இருக்கிறார்கள். தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக டெல்லியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்திற்கு பாதுகாப்புடன் செல்ல இருக்கிறார்.
அங்கு இரவு ஓய்வு எடுக்கும் தமிழக முதல்வர் இரவு 7.30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவருடைய இல்லத்தில் சந்தித்து தமிழக சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்க இருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3oYOrJK
via IFTTT
0 Comments