“ஆஸி டெஸ்ட் தொடர் வெற்றியின் மூலம் என் முகத்தில் முட்டையை வீசியுள்ளார்கள்”-மைக்கேல் வாகன்

LATEST NEWS

500/recent/ticker-posts

“ஆஸி டெஸ்ட் தொடர் வெற்றியின் மூலம் என் முகத்தில் முட்டையை வீசியுள்ளார்கள்”-மைக்கேல் வாகன்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் வென்றதன் மூலம் எனது முகத்தில் முட்டையை வீசியுள்ளார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இந்தத் தொடரின் முதல் போட்டியில் அடிலெய்ட் மைதானத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியதும் ‘இந்தியா இந்த தொடரை 0 - 4 என இழக்கும்’ என வாகன் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

image

“அடிலெய்ட் டெஸ்டில் இந்தியா தோல்வியை தழுவியதும் ஆஸ்திரேலியா இந்த தொடரை வெல்லும் என நான் சொல்லி இருந்தேன். இந்தியா இந்தத் தொடரில் கம்பேக் கொடுக்கும் என ஒருபோதும் நான் நினைக்கவில்லை. இந்தத் தொடரில் பெற்ற வெற்றியின் மூலம் என் முகத்தில் முட்டையை வீசியுள்ளார்கள் இந்திய வீரர்கள். இது அனைத்தும் நல்லதுக்குதான். நான் அதை எண்ணி வருந்தவும் இல்லை. சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், தாக்கூர் என இளம் இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். நான் சொன்னது தவறு என்பதில் எனக்கு துளி அளவும் வருத்தம் இல்லை” என வாகன் தெரிவித்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/35Yxs2J
via IFTTT

Post a Comment

0 Comments