குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்காக பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் புறப்பட்டனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வரும் நிலையில் மறுபுறம் இது தொடர்பாக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தோல்வி தொடர்கதையாகியுள்ளது. இந்நிலையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் வரும் 26ஆம் தேதி டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டிராக்டர் பேரணியால் குடியரசு தின நிகழ்ச்சிகள் பாதிக்கப்படும் எனவும் எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த சூழலில் பேசிய விவசாயிகள் சங்கத்தின் யோகேந்தர் யாதவ், டெல்லி சுற்றுவட்டச்சாலையில் டிராக்டர் பேரணி அமைதியான முறையில் நடக்கும் என்றும் குடியரசு தின நிகழ்ச்சிகளுக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டுள்ளனர். மொத்தம் ஒரு லட்சம் டிராக்டர்கள் டெல்லியில் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் சட்டங்களை எதிர்த்து தாங்கள் 2024ஆம் ஆண்டு மே மாதம் வரை போராட்டம் நடத்த தயாராகி உள்ளதாக பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2LxrLC3
via IFTTT
0 Comments