அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் இந்திய நேரப்படி இரவு பத்து மணிக்கு அதிகாரபூர்வமாக பதவியேற்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கிறார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் களமிறங்கிய ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றியை அறுவடை செய்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று முறைப்படி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
தலைநகர் வாஷிங்டனில், அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்துக்கு முன்பு விழா நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு பத்து மணிக்கு விழா தொடங்குகிறது. முதலில் தொடக்க உரைகள் இடம்பெறும். இதைத் தொடர்ந்து, கமலா ஹாரிஸ் உறுதிமொழி ஏற்று, துணை அதிபராக பதவிப்பிரமானம் எடுத்துக் கொள்கிறார். பத்தரை மணிக்கு ஜோ பைடன் பதவியேற்று, நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.
இதைத் தொடர்ந்து, ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ 90 நிமிட நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார். விழாவில் பிரபல பாடகி லேடி காகா அமெரிக்க தேசிய கீதத்தை பாடுகிறார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவத் தளபதி, படைகளை பார்வையிடும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெறும். பின்னர், அதிபரும் துணை அதிபரும் ராணுவத்தினரின் மிடுக்கான இசை முழங்க, வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3nVzret
via IFTTT
0 Comments