
காரைக்காலில் இருந்து சாராயம் கடத்திய அமமுக இளைஞரணி செயலாளர் கைது செய்யப்பட்டார். 1000 பாக்கெட் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகை மாவட்டம் கங்களாஞ்சேரி பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரை மறித்து சோதனை செய்தபோது, காரில் சாராய பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து பாண்டி ஜூஸ் என்று அச்சிடப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள 1000 சாராய பாக்கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் பகுதியை சேர்ந்த சர்புதீனை கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட சர்புதீன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காரைக்கால் மாவட்ட இளைஞரணி செயலாளர் என்பதும், கோட்டுச்சேரியிலிருந்து திருவாரூருக்கு விற்பனைக்காக சாராய பாக்கெட்டுகள் கடத்திச் செல்லப்பட்டதும் தெரியவந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments