உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்ததே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர காரணம் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
கொரோனா பொது முடக்கம் காரணமாக எண்ணெய் வள நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதை குறைத்துள்ளதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 35 டாலராக இருந்த நிலையில் தற்போது உற்பத்தி குறைவால் அவ்விலை 55 டாலராக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன் விளைவாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தர்மேந்திர பிரதான் கூறினார். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகித அளவுக்கு வெளிநாடுகளையே சார்ந்திருப்பதால் அங்கு ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்கள் இந்தியாவையும் பாதிப்பதாக அமைச்சர் கூறினார்.
இதன் காரணமாகவே சூரிய எரிசக்தி உற்பத்தி, மின்சார வாகன பயன்பாடு, பெட்ரோலில் எத்தனால் கலப்பது உள்ளிட்ட முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ள நிலையில் அமைச்சரின் விளக்கம் வெளியாகியுள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3bXM3zr
via IFTTT
0 Comments