முதல்வர் சென்ற விமானத்தில் இருந்த குழந்தை நீண்ட நேரமாக அழுத நிலையில், குழந்தையும் தாயும் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து நேற்று மதியம் விஸ்தாரா விமானம் டெல்லிக்கு புறப்படவிருந்தது. அப்போது விமானத்துக்குள்ளிருந்த 4 மாத குழந்தை விடாமல் அழுததாக தெரிகிறது. குழந்தையை எவ்வளவோ சமாதானப்படுத்தியும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனால் அருகிலிருந்த பயணிகள் அவதிக்குள்ளாவார்கள் எனக் கருதி குழந்தையும் அதன் தாயும் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர். குழந்தையின் தந்தை மட்டும் அதே விமானத்தில் டெல்லி சென்றார்.
இந்த குழந்தை செல்லவிருந்த அதே விமானத்தில்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்றார். எனினும் குழந்தை இறக்கிவிடப்பட்ட நிகழ்விற்கு கால் மணி நேரம் கழித்துதான் முதல்வர் விமானத்தில் ஏறியதாக அவரது அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. இறக்கிவிடப்பட்ட குழந்தையும் அதன் தாயும் சில மணி நேரம் கழித்து அதே நிறுவனத்தின் அடுத்த விமானத்தில் டெல்லி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து சென்னை விமான நிலைய இயக்குநர் சுனில் தத் கூறும்போது, “ குழந்தை அழுதால் விமானத்தை விட்டு இறக்கி விட வேண்டும் என்ற விதிமுறை இல்லை.
குழந்தை சில காரணங்களால் தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. அதன் காரணமாக நாங்கள் அவர்களை இறக்கிவிட விரும்பவில்லை. குழந்தை உடல்நலக் குறைவால் தொடர்ந்து அழுததால் நாங்கள் அவர்களை இறக்கி விடும் முடிவை பரிசீலித்தோம். ஆனால் ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் விதிமுறைகள் மாறும்.
சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் மேலாளர் கூறும்போது, “ குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால், பயணி தானாக முன்வந்து, விமானத்தை விட்டு இறங்கினார்.நாங்கள் அவர்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.” என்றார்.
நேற்று பகல் 2 நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்துத்து பேச உள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/35VDdhw
via IFTTT
0 Comments