"தேசியக் கட்சிகளை அனுசரித்துதான் மாநில கட்சிகள் இருக்க வேண்டிய நிலை"-கங்கை அமரன்

LATEST NEWS

500/recent/ticker-posts

"தேசியக் கட்சிகளை அனுசரித்துதான் மாநில கட்சிகள் இருக்க வேண்டிய நிலை"-கங்கை அமரன்

தேசியக் கட்சிகளை அனுசரித்துதான் மாநில கட்சிகள் இருக்க வேண்டிய நிலை உள்ளதாக மாநில செயற்குழு உறுப்பினரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்தார்.

image


காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற நம்ம ஊர் பொங்கல் விழாவில் பாரதிய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “

தேசியக் கட்சிகள் உதவி இல்லாமல் இந்தியாவில் எந்த மாநிலமும் இயங்க முடியாது. எந்த பொருள் வேண்டும் என்றாலும் மத்திய அரசாங்கமிடம் கேட்க வேண்டிய நிலை உள்ளது.” என்றார்

நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் “தேர்தலில் அதிமுக - திமுகவிற்கு இடையேதான் போட்டி. தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை” என்பது தொடர்பாக கங்கை அமரனிடம் கேள்வி எழுப்பியபோது, “ அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் அறியாமல் கூறிவிட்டார்.

தேசிய கட்சிகளை அனுசரித்துதான் மாநில கட்சிகள் இருக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது . ஒருவேளை அவர் தனிக்கட்சி துவங்குவதற்காக இப்படி பேசுகிறாரோ என்னவோ என தெரியவில்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் இது குறித்து எதுவும் பேசவில்லை சரியாகத்தான் இருக்கிறார்கள். தேசிய கட்சிகளின் உதவி இல்லாமல் இயங்க முடியும் என்றால் தேசிய கட்சிகளை வேண்டாம் என்று கூறியிருக்கலாம். அவர் அவ்வாறு கூறவில்லை. இது வாழைப்பழம் காமெடிபோல உள்ளது” என்றார்.

மேலும் பேசிய அவர், “பாஜக தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டு முன் மாதிரியாக இருப்பார்கள்" என தெரிவித்தார்.

பாரத ரத்னா வழங்குவதற்கான பட்டியலில் பாடகர் எஸ்.பி.பி. பெயரும் இருக்கிறது. என்னாலான முயற்சிகளை தற்போது அதற்காக செய்து வருகிறேன்”என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments