"வாரிசு அரசியலை முறியடிக்க வேண்டும்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கூறினார்.
முதல்வர், துணை முதல்வர் தலைமையிலான அதிமுக பொதுக்குழுக்கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். வரும் சட்டமன்ற தேர்தல் மூலமாக வாரிசு அரசியலை முறியடிக்க வேண்டும்.
தமிழகத்தை ஆளக் கூடியத் தகுதி அதிமுகவுக்கு உள்ளது என்ற நற்சான்றிதழை மக்கள் கொடுத்துள்ளனர்.
மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தை இன்னும் ஒரு மாதத்தில் திறக்க உள்ளோம். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் அல்ல. ஆனால், கட்சி கொடுத்த பணியை சிறப்பாக செய்து கொண்டிருப்பதாக நம்புகிறேன். 4 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக நான் நம்புகிறேன்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி "சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - திமுகவிற்கு இடையேதான் போட்டி. தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் அதிமுக அல்லது திமுக முதுகில் ஏறிதான் பயணம் செய்ய வேண்டும். அதிமுகவில் சிலீப்பர் செல்களுக்கு வாய்ப்பே இல்லை. சிலர் வெளியே வருவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர் வெளியே வந்தாலும் அவருக்கு ஆயிரம் பிரச்னைகள் உள்ளது" என்றார்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அறிய > 'கூட்டணியை ஓபிஎஸ், இபிஎஸ் இறுதி செய்வர்' - அதிமுகவின் 16 தீர்மானங்கள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments