திருடிய பணத்தில் இருந்து சுகாதார மையங்கள் உள்ளிட்ட தொண்டுகளை செய்த பீகாரை சேர்ந்த முகமது இர்பானை, டெல்லி போலீசார் கைது செய்தனர்.
டெல்லி, பஞ்சாப் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில், பல திருட்டு வழக்குகளில் சிக்கிய ஒருவர், அந்த பணத்தை விலையுயர்ந்த கார்களை வாங்கவும், தொண்டு பணிகளுக்காகவும் பயன்படுத்தியிருக்கிறார். அவர் தற்போது டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த நபர் பீகாரில் தனது சொந்த மாவட்டமான சீதாமாரியில் ஜில்லா பரிஷத் தேர்தலில் போட்டியிடும் திட்டத்துடன் இருந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருடிவிட்டு வீட்டிற்கு திரும்பிய பிறகு ஏழைகளின் "மேசியா" ஆக, அந்த நபர் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்ததுடன், திருடப்பட்ட பணத்தைக்கொண்டு சுகாதார முகாம்களை அமைத்தார் என்று காவல்அதிகாரிகள் கூறினார்கள்.
தனது நலப்பணிகளுக்காக "ராபின்ஹுட்" என்ற அடைமொழியை பெற்ற இவரின் பெயர் முகமது இர்பான், இவர் ஜனவரி 7-ஆம் தேதி மேற்கு டெல்லியில் உள்ள நாரைனா மேம்பாலம் அருகே பிடிபட்டதாக குற்றப்பிரிவு டிசிபி மோனிகா பரத்வாஜ் தெரிவித்தார். அவரிடமிருந்து ஜாகுவார் மற்றும் இரண்டு விலையுயர்ந்த நிசான் கார்களை மீட்டெடுத்ததாகவும் தெரிவித்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட முகமது இர்பான், விசாரணையின்போது, அவரது கும்பல் ஆடம்பரமான சுற்றுப்புறங்களில் பூட்டப்பட்ட வீடுகளை மட்டுமே குறிவைத்ததாக தெரியவந்தது. இந்த வீடுகளில் இருந்து பணம் மற்றும் நகைகளை மட்டுமே அவர்கள் திருடிச் செல்வதாகவும் அவர் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments