பாஜகவிற்கு ரஜினி ஆதரவு தந்தால் வரவேற்போம் - எல்.முருகன் விரிவான பேட்டி

LATEST NEWS

500/recent/ticker-posts

பாஜகவிற்கு ரஜினி ஆதரவு தந்தால் வரவேற்போம் - எல்.முருகன் விரிவான பேட்டி

40 தொகுதிகளில் பாஜக போட்டி, அமித்ஷா வருகை, அஞ்சல் துறை தேர்வுகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு ஆகிய பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.

image

இராமநாதபுரத்தில் நம்ம ஊர் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் வருகை தந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தைப்பூச திருவிழாவிற்கு அரசு விடுமுறை அளித்ததற்கு, தமிழக அரசுக்கு, எல்.முருகன் நன்றி தெரிவித்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது :

தைப்பூச திருவிழாவிற்கு அரசு விடுமுறை அளித்தது குறித்த கேள்விக்கு..

“தமிழக பாஜக சார்பில் வருகிற 9, 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்வை 5000 தாய்மார்கள் பெண்களுடன் கொண்டாட உள்ளோம். தமிழக பாஜகவை பொறுத்தவரை பூத் கமிட்டியை வலுப்படுத்த உள்ளோம். தைப்பூச தினத்திற்கு விடுமுறை அளித்த முதல்வருக்கு நன்றி. தைப்பூச விடுமுறை அறிவிப்பு வெற்றிவேல் யாத்திரைக்கு கிடைத்த வெற்றியாக இதனை பார்க்கிறோம். தை ஒன்றாம் தேதி முதல் 10 லட்சம் உறுப்பினர்கள் பாஜகவில் சேரும் வகையிலான பரப்புரை மேற்கொள்ள உள்ளோம். பொதுமக்கள் தேர்தல் அறிக்கையாக பாஜகவின் தேர்தல் அறிக்கை இருக்கும்" என்றார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வராத பட்சத்தில், பாஜகவானது, அவருடைய ஆதரவு கேட்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு..

 "தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்த முத்துராமலிங்க தேவரின் வழியில் எங்களது கட்சியானது நடந்துக்கொண்டிருக்கிறது. ரஜினி ஆதரவு தெரிவித்தால் அதனை வரவேற்போம்” என தெரிவித்தார்.

அதிமுகவுடனான கூட்டணி வெற்றி பெரும் பட்சத்தில், ஆட்சியில் பங்கு கேட்க நினைக்கும் பாஜகவின் எண்ணம் போகாத ஊருக்கு வழி தேடுவது போல என வைகைச்செல்வன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு..

“தேர்தல் முடியட்டும், அதன் பிறகு அதனை குறித்து பேசிக்கொள்ளலாம்” என தெரிவித்தார்..

அஞ்சல் துறை தேர்வுகளில் தமிழ் மொழியை மத்திய அரசு புறக்கணிப்பதாக, தொடர்ந்து தமிழக கட்சிகள் குற்றம்சாட்டுவது குறித்த கேள்விக்கு..

“அஞ்சல்துறை தேர்வில் தமிழ் மொழி சேர்க்கபடும் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்தது போல, விரைவில் தமிழ் மொழி சேர்க்கப்படும்” என தெரிவித்தார்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கான தேர்வு தமிழகத்தில் நடைபெறாமல், மும்பையில் நடைபெறுவதாக எழும் குற்றசாட்டு குறித்த கேள்விக்கு..

“இந்தியாவிலுள்ள அனைத்து அணுமின்நிலையங்களில் கல்பாக்கம் ஒரு பகுதி எனவும், அதன் தலைமையிடம் மும்பையில் இருப்பதனால், தேர்வு மும்பையில் நடப்பது இயல்பான விஷயம். வேண்டுமானால் தமிழகத்தில் வைக்கலாம் என கோரிக்கையாக வைக்கலாமே தவிர அனைத்தையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது” என தெரிவித்தார்..

அமித்ஷா 13ம் தேதி சென்னை வரும்பட்சத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிக்க வாய்ப்புள்ளதா மற்றும் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என குறித்த கேள்விக்கு..

“அமித்ஷா வருவது குறித்து அதிகாரபூர்வமான தகவல் ஏதும் கிடைக்க பெறவில்லை. தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதன்படி செயல்படுவோம்” என தெரிவித்தார்.

சிறுபான்மையினருக்கு எதிரி பாஜக தான்,  என முக ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு..

“அனைத்து கிறிஸ்துவ, முஸ்லீம் சகோதரர்கள் அனைவரும் பாஜகவில் ஆர்வமுடன் சேர்கின்றனர். நாட்டை சரியான பாதையில் பாஜக கொண்டு செல்கிறது” என தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில், 40க்கும் மேற்பட்ட தொகுதிக்கு சீட் கேட்டு பாஜக நெருக்கடி கொடுப்பது குறித்த கேள்விக்கு..

“உங்களின் யூகத்திற்கு பதில் தெரிவிக்க முடியாது. நாங்கள் நெருக்கடி கொடுக்கவில்லை. தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார்..

தைப்பூசத்திற்கான அரசு விடுமுறை நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையாகவே நிறைவேற்றப்பட்டது என சீமான் கூறியது குறித்த கேள்விக்கு..

“பாஜக வேலயாத்திரை நடத்தி, அதன் மூலம் வைக்கப்பட்ட கோரிக்கையின் காரணமாகவே தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டது” என தெரிவித்தார்..

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments