இந்தியாவில் அறிமுகமாகிறது ரியல்மி X7 மற்றும் X7 ப்ரோ?

LATEST NEWS

500/recent/ticker-posts

இந்தியாவில் அறிமுகமாகிறது ரியல்மி X7 மற்றும் X7 ப்ரோ?

ரியல்மி நிறுவனத்தின் X7 மற்றும் X7 ப்ரோ ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த X சீரிஸ் ஸ்மார்ட் போன் பல நாட்களாகவே இந்தியாவில் இப்போது வருமா என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் இது உறுதியாகி உள்ளது. ரியல்மி நிறுவனம் இந்த போனை வெளியிட உள்ள தேதி உறுதியாகவில்லை என்றாலும் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள X சீரிஸ் போன் குறித்த கணிப்புகளை சொல்லுமாறு ஸ்மார்ட் போன் பயனர்களிடம் கேட்டது. இருப்பினும் வரும் பிப்ரவரி 4 அன்று ரியல்மி X7 இந்தியாவில் அறிமுகமாகும்  என்ற தகவல் கசிந்துள்ளது. 

6ஜிபி மற்றும் 8ஜிபி என இரண்டு ரேம்களில் இந்த போன் அறிமுகமாகும் எனவும் சொல்லப்படுகிறது. 128ஜிபி இண்டர்னல் மெமரி இந்த இரண்டு மாடல்களிலும் இருக்கும் என தெரிகிறது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளியாக உள்ளது. இதையடுத்து X7 ப்ரோ ஸ்மார்ட் போனும் வெளியாகலாம் என தெரிகிறது. 

image

6.4 இன்ச் டிஸ்பிளே, 4300  மெகா ஹெட்ஸ் பேட்டரி, 65 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, பின்பக்கத்தில் நான்கு கேமிரா என தனித்துவமான அம்சங்களில் X7 அசத்துகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments