போலி ஆவணங்கள் மூலம் பணி - சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர்கள் சஸ்பெண்ட்

LATEST NEWS

500/recent/ticker-posts

போலி ஆவணங்கள் மூலம் பணி - சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர்கள் சஸ்பெண்ட்

போலி சான்றிதழ்களை சமர்பித்து பணியில் சேர்ந்ததாக சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சென்னை மாநிலக் கல்லூரியில் காமாட்சி 2009ஆம் ஆண்டிலும், சேதுலகா 2011ஆம் ஆண்டிலும் உதவி பேராசிரியர்களாக பணியில் சேர்ந்தனர். தற்போது அவர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு பணியில் இருவரும் போலி சான்றிதழ் அளித்திருப்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது உயர்கல்வித்துறை,

Presidency College (Chennai) Fees & Courses 2022-23

மேலும், போலி ஆவணங்கள் சமர்ப்பித்த குற்றத்திற்காக பேராசிரியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு உயர்க்கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. இதனிடையே, போலி ஆவணங்கள் தொடர்பாக துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க:மாணவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் - ஆட்சியர் அறிவுறுத்தல் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments