ஐபிஎல்: சம பலத்தில் லக்னோ - பஞ்சாப்: வெற்றி யாருக்கு?

LATEST NEWS

500/recent/ticker-posts

ஐபிஎல்: சம பலத்தில் லக்னோ - பஞ்சாப்: வெற்றி யாருக்கு?

முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி சென்னை சூப்பர் கிங்சையும்,  லக்னோ அணி மும்பை இந்தியன்ஸையும் தோற்கடித்ததால் இரு அணியினரும் கூடுதல் நம்பிக்கையுடன் இறங்குவார்கள்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் 41 ஆட்டங்கள் முடிந்து விட்டன. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 42-வது லீக் போட்டியில் மயங்க் அகர்வால்  தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  அணியும் மோதுகின்றன.

image

அறிமுக அணியான லக்னோ 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 7 -வது இடத்தில் உள்ளது. ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளே ‘ப்ளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். அந்த வகையில் லக்னோ அணிக்கு  நான்காவது இட வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எனினும் ஆர்சிபி அணியும் நான்காவது இடத்திற்கு கடும் போட்டி போட்டு வருவதால் இன்றைய போட்டியில் லக்னோ வெற்றி பெறுவது அந்த அணிக்கு பாதுகாப்பானதாக இருக்கும். ஒருவேளை இந்த ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றால் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்துக்கு முன்னேறும்.

முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி சென்னை சூப்பர் கிங்சையும்,  லக்னோ அணி மும்பை இந்தியன்ஸையும் தோற்கடித்ததால் இரு அணியினரும் கூடுதல் நம்பிக்கையுடன் இறங்குவார்கள்.

லக்னோ அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், குயின்டான் டி காக், தீபக் ஹூடா, ஸ்டோனிஸ் நல்ல நிலையில் உள்ளனர். பஞ்சாப் அணியில் ஷிகர் தவான், பானுகா ராஜபக்ச பேட்டிங்கில் அமர்க்களப்படுத்துகின்றனர். கேப்டன் மயங்க் அகர்வால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். மொத்தத்தில் சரிசம பலத்துடன் இரு அணிகளும் மல்லுகட்டுவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை கணிப்பது கடினம்.

image

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, ஆயுஷ் படோனி, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய் , அவேஷ் கான்/மொஹ்சின் கான்

பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான், மயங்க் அகர்வால் (கேப்டன்), பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், ஜானி பேர்ஸ்டோ, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், சந்தீப் சர்மா

இதையும் படிக்க: குல்தீவ் யாதவ் சுழலில் சிக்கியது கொல்கத்தா - 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/KNqZHEp
via IFTTT

Post a Comment

0 Comments