தொண்டு நிறுவனத்திற்கு உரிமம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் அரசு ஊழியர்கள் உட்பட 14 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
புதிதாக என்.ஜி.ஓ. உரிமம் பெறுவதற்கும், புதுப்பித்தலுக்கும் லஞ்சம் கொடுத்து மோசடி நடைபெறுவதாக சி.பி.ஐ-க்கு புகார் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 40 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டனர். இதில், FCRA எனப்படும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறை சட்டத்தின் உரிமம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்தது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து, 37 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அரசு ஊழியர்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கோவையை சேர்ந்த பிரபல மருத்துவமனையின் உரிமையாளரான ராஜசேகரன் மற்றும் ஆடிட்டர் உட்பட 3 பேர் தமிழ்நாட்டில் இருந்து கைதாகி உள்ளனர். அவர்களை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணைக்கு டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments