குரூப் 2 குரூப் 2ஏ பதவிகளில் உள்ள 5,529 காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு கடந்த சனிக்கிழமை (மே 21, 2022) நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் சுமார் 117 இடங்களில் 4,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வர்கள் தேர்வு எழுதினர். தற்போது இத்தேர்விற்கான சரியான விடைகள் எது என்பது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
குரூப்-2 மற்றும் 2A பதவிகளில் ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-II (நேர்காணல் பதவிகள் மற்றும் நேர்காணல் அல்லாத பதவிகள்) கடந்த மே 21-ம் தேதி நடந்திருந்தது. இதில் தமிழில் தேர்வெழுத விரும்புவோருக்கு தமிழில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்பட்டது. இதுவே ஆங்கிலத்தில் தேர்வெழுத விரும்புவோருக்கு, பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள், பொது அறிவியல் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்படும். இவற்றின் மொத்த மதிப்பெண் 300-க்கு எடுத்துக்கொள்ளப்படும். அதற்கு 90-க்கும் அதிகமான மதிப்பெண் பெறுவது அடிப்படை.
இதையும் படிங்க... ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
இந்தத் தேர்வின் முடிவுகள், ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும். டிசம்பர் 2022 - ஜனவரி 2023 மாதங்களில், கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு நடைபெறும் என சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தேர்வின் தற்காலிக / உத்தேச விடைத்தாள் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 7,382 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை ஜூலை 24 ஆம் தேதி நடத்துகிறது.
குரூப் 2, 2ஏ தேர்வு தற்காலிக விடைகளை தனித்தனியாக ஒவ்வொரு பாடப்பிரிவுக்குமான வினாக்களுக்கான (தற்காலிக/உத்தேச) விடையை அறிய, இங்கே க்ளிக் செய்யவும் - பொது தமிழ் | பொது அறிவு | பொது ஆங்கிலம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/lM4Ssab
via IFTTT
0 Comments