ஆந்திரா: அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த பொதுத்தேர்வில் முறைகேடு - 42 ஆசிரியர்கள் கைது

LATEST NEWS

500/recent/ticker-posts

ஆந்திரா: அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த பொதுத்தேர்வில் முறைகேடு - 42 ஆசிரியர்கள் கைது

ஆந்திர பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக இதுவரை 42 பள்ளி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைதாகியுள்ளனர்.

ஆந்திராவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாளிலேயே தெலுங்கு வினாத்தாள் தேர்வு தொடங்கிய பின்னர் ஒரு மணி நேரம் கழித்து வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டது. இரண்டாவது, மூன்றாவது நாட்களிலும் வினாத்தாள்கள் வெளியாகின.

image

ஆனால் உண்மையில் வினாத்தாள் எதுவும் கசியவில்லை என்றும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக சில ஆசிரியர்கள் தேர்வு தொடங்கிய பின்னர் வினாத்தாள்களை வாட்ஸ் அப்பில் பரப்பி வினாத்தாள் வெளியானது போல் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக ஆந்திர கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

இதையும் படிக்கலாம்: பாலியல் புகார் - மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நடிகர் விஜய் பாபு விலகல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments