தமிழ்நாடு முழுவதும் ஷவர்மா கடைகளில் ரெய்டு... பறிமுதல் செய்யப்படும் கெட்டுப்போன இறைச்சிகள்

LATEST NEWS

500/recent/ticker-posts

தமிழ்நாடு முழுவதும் ஷவர்மா கடைகளில் ரெய்டு... பறிமுதல் செய்யப்படும் கெட்டுப்போன இறைச்சிகள்

சேலத்தில் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் 133 கிலோ கெட்டுப்போன இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல வேலூர், குடியாத்தம் நகரப் பகுதிகளில் ஷவர்மா விற்பதற்கு நகராட்சி நிர்வாகம் அதிரடி தடை பிறப்பித்துள்ளது.

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட இளம் பெண் உயிரிழந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் ஷவர்மா கடைகளில் மருத்துவத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் வேலூர், குடியாத்தம் நகராட்சியில் ஷவர்மா விற்பதற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், சுகாதாரமற்ற முறையில் அசைவ உணவுகளை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த உணவகங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

image

ஷவர்மா சாப்பிட்டவர்கள் பாதிப்புக்குள்ளானதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் அசைவ உணவகங்களில் தொடர் சோதனை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி சேலம் மாவட்டத்தில் பரவலாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அசைவ உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். சேலம் மாநகராட்சி பகுதிகள் மட்டுமின்றி புறநகர் பகுதிகளான அயோத்தியாபட்டணம், எடப்பாடி, நங்கவல்லி, ஓமலூர் என பல்வேறு பகுதிகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று (09.05.2022) நாளில் 113 அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில் 19 கடைகளில் கெட்டுப்போன இறைச்சி வகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ரூபாய் 34650 மதிப்பிலான 133 இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 13 ஆயிரம் அபராதம் மற்றும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

போலவே விழுப்புரத்தில் செயற்கை வண்ணம் பூசப்பட்ட 18 கிலோ சவர்மா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 3 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் குழு விழுப்புரம் நகராட்சி பகுதியில் இயங்கும் ஓட்டல்கள், துரித உணவகங்கள் ஆகியவற்றில் தயாரித்து விற்கப்படும் ஷவர்மா குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வில் 3 கடைகளில் விற்கப்பட்ட, அதிக அளவில் செயற்கை வர்ணம் பூசப்பட்ட சவர்மா 12 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் அந்த 3 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மாவட்ட நியமன அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டதுடன் அறிக்கையும் வெளியிட்டார்.

image

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட வழிமுறைகள்:

1) உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும்

2) உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றவரிடம் மட்டுமே சிக்கன் போன்ற மூலப் பொருட்களை வாங்க வேண்டும்

3) சிக்கனை மசாலாவுடன் கலக்கும்போது கையுறை அணிந்திருக்க வேண்டும்.

4) ஷவர்மா தயார் செய்யும் பணியாளரும் மற்ற பணியாளர்களும் டைபாய்டு போன்ற உணவு சம்பந்தப்பட்ட தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தியதற்கான மருத்துவ தகுதிச் சான்று பெற்றிருக்க வேண்டும்.

5) ஷவர்மா அடுப்பு தூசிகள் படியுமாறு சாலை ஓரத்தில் இருக்கக்கூடாது.

image

6) ஷவர்மா நன்கு வேக வைத்த பின்னர்தான் நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.

7) ஷவர்மா அடுப்பு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். அவ்வப்போது அடுப்பினை அணைத்து பயன்படுத்தக்கூடாது.

8) அடுப்பில் வைத்து வெந்த 2 மணி நேரத்திற்குள் பரிமாற வேண்டும். அதுவரை அடுப்பு மிதமான வெப்பத்தில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

இதையும் படிங்க... இலங்கையில் பெரும் வன்முறை: 4 பேர் உயிரிழப்பு

9) தினந்தோறும் மீதமான ஷவர்மா பரிமாறாமல் கழிவாக அகற்றிவிடவேண்டும்.

10) ஷர்மாவை குறைந்தபட்சம் 70 டிகிரி செல்சியஸில் வேக வைக்க வேண்டும்.

image

11) சமைப்பவர் கைகள் படாமல் நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும்.

12) ஷவர்மா அடுப்பு தொடர்ந்து இயங்கியபடி இருக்க வேண்டும். மேற்படி வழிமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் மூடப்படும்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/K8gbc7G
via IFTTT

Post a Comment

0 Comments