தேனி டூ சென்னை: விற்பனைக்காக காரில் கஞ்சா கடத்தி சென்ற மூவர் கைது

LATEST NEWS

500/recent/ticker-posts

தேனி டூ சென்னை: விற்பனைக்காக காரில் கஞ்சா கடத்தி சென்ற மூவர் கைது

தேனி மாவட்டத்தில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சா, கார் மற்றும் 60 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் 3 பேர் கொண்ட கும்பல் கஞ்சா விற்பனை செய்வதாக அரும்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து அண்ணாநகர் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் கொண்ட தனிப்படை போலீசார் அந்த விடுதிக்கு சென்று சோதனை செய்தனர். போலீசாரை பார்த்ததும் மூன்று பேர் தப்பி சென்றநிலையில் அவர்களை விரட்டிச் சென்ற போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

image

விசாரணையில் அவர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த சேதுமாதவன், தீனதயாளன், மாணிக்கம் என்பதும், இவர்கள் 3 பேரும் தேனியில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி அங்கு வைத்து கஞ்சாவை விற்பனை செய்து விட்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையும் படிங்க... கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்

இவர்களிடம் இருந்து ஒரு கார், 3 கிலோ கஞ்சா, 60 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments