மருத்துவ செல்வு பணம் கொடுத்து உதவிய நண்பரை ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பணத்தை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் நகரைச் சேர்ந்தவர் மூத்த குடிமகன் ஸ்ரீகாந்த் மூர்த்தி, இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு அவரது நண்பரின் மருத்துவத்திற்கு பணம் தேவைப்படுவதாகக் கூறி 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார். இதையடுத்து ஸ்ரீகாந்த்தும் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சில தினங்கள் கழித்து அவரது நண்பரிடம் இது குறித்து கேட்டபோது தான் பணம் கேட்கவில்லை என கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஸ்ரீகாந்த தான் ஏமாற்றபட்டதை அறிந்து அடையார் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அடையார் சைபர் கிரைம் போலீசார் துரித விசாரணை நடத்தி அந்த வங்கிக் கணக்கை முடக்கி அதிலிருந்த 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டு ஸ்ரீகாந்திடம் ஒப்படைத்தனர்.
துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டுக் கொடுத்த அடையார் சைபர் கிரைம் துணை ஆணையர் மகேந்திரன் மற்றும் தனிப்படையினருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments