தனது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், உத்தராகண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தண்ணீர் தொட்டியில் ஏறி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்தராகண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணாவின் மருமகள், தனது மகளை மாமனார் பாலியல் தொந்தரவு செய்தததாக புகார் செய்த நிலையில், ராஜேந்திர பகுகுணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் 59 வயதான ராஜேந்திர பகுகுணா, தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பகுகுணா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்த மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார்.
தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு குறித்து ராஜேந்திர பகுகுணா மிகவும் கவலையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். எனவே தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, அவர் பலமுறை காவல்துறையின் அவசர எண்ணான 112இல் அழைத்து, தற்கொலை செய்து கொள்ளும் தனது திட்டத்தைப் பற்றி தெரிவித்தார். போலீஸ் அவரது வீட்டை அடைந்த நேரத்தில், பகுகுணா தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தன்னைத்தானே சுட்டுக்கொள்ளப் போவதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ஒலிபெருக்கியை பயன்படுத்தி எச்சரிக்கை செய்து போலீசார் அவரை தற்கொலை செய்து கொள்ள விடாமல் தடுக்க முயன்றனர், ஆனால் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக திரும்ப திரும்ப கூறிய ராஜேந்திர பகுகுணா, திடீரென துப்பாக்கியை எடுத்து மார்பில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேந்திர பகுகுணா, உத்தராகண்டில் 2004-05ல் என்.டி.திவாரி அரசில் இணை அமைச்சராக இருந்தார். சாலைவழி தொழிற்சங்கத் தலைவரான இவர், ஹல்த்வானி டிப்போ பணிமனையில் பணிபுரிந்து கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments