'முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய விருப்பம்' - மனம்திறந்த பில் கேட்ஸ்

LATEST NEWS

500/recent/ticker-posts

'முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய விருப்பம்' - மனம்திறந்த பில் கேட்ஸ்

விவகாரத்து செய்த மனைவி மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பில் கேட்ஸ் கூறியுள்ளார்.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா தம்பதியரின் 30 ஆண்டுகால மண வாழ்வில் விரிசல் ஏற்பட்டு, அது சென்ற ஆண்டு முடிவுக்கு வந்தது. கடந்த ஆண்டு மே மாதம் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அவர்களுக்கு ஜென்னர், ரோரி மற்றும் போப் ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர்.

இந்தநிலையில் லண்டன் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு பில்கேட்ஸ் அளித்துள்ள பேட்டியில் மெலிண்டாவை  மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''கடந்த இரண்டாண்டுகள் மிகவும் முக்கியமான காலகட்டமாகி போனது. இதற்கு காரணம் கொரோனா பெருந்தொற்று. எனக்கு இது வித்தியாசமான காலம்; சிலவற்றை உணர்த்திய காலம் இது. குழந்தைகள் வளர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஒவ்வொரு திருமணமும் மாற்றத்தை நோக்கி செல்கிறது. விவாகரத்து ஆனாலும் எங்கள் திருமணம் சிறந்த திருமணம்.

image

நாங்கள் ஒன்றாக அறக்கட்டளையை உருவாக்கினோம். முன்னாள் மனைவியுடன் இன்னும் அறக்கட்டளையில் பணியாற்றுவதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். எங்கள் அறக்கட்டளையின் வருடாந்திர ஊழியர் கூட்டம் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது. மெலிண்டாவும் நானும் ஒன்றாக நடத்தும் வருடாந்திர கூட்டமும் இதுவாகும். மெலிண்டாவுடன் இன்னும் நட்புடன் இருப்பதாக நம்புகிறேன். அவருடன் எனக்கு மிக முக்கியமான, நெருக்கமான அதேசமயம் சிக்கலான உறவு இருந்தது. இருப்பினும் நாங்கள் ஒன்றாக வேலை செய்ய முடிவு செய்தோம்.

image

எங்களின் திருமணம் ஏன் முதலில் முடிவுக்கு வந்தது என்பதைப் பொறுத்தவரை திருமணங்கள் மிகவும் சிக்கலானவை, அதை ஆராய்வது வீணானது. விவாகரத்தின் தாக்கத்தில் இருந்து இருவரும் மீண்டு வருகிறோம். நான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். ஆனால் நான் மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். எனது எதிர்காலத்தைப் பொறுத்தவரை, என்னிடம் எந்த திட்டமும் இல்லை, ஆனால் நான் திருமணத்தை பரிந்துரைக்கிறேன். மெலிண்டா கேட்ஸ் மீண்டும் திருமணம் செய்து கொள்வாரா என்பது எனக்குத் தெரியாது'' என்று பில்கேட்ஸ் கூறினார்.

இதையும் படிக்கலாம்: அமெரிக்காவை ஒரு பொருட்டாக புதின் மதிக்கவில்லை என்பது "அவமானம்" - டொனால்டு ட்ரம்ப்


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/MO9t0Lz
via IFTTT

Post a Comment

0 Comments