சென்னை: இளைஞர் வெட்டிக் கொலை: மர்ம நபர்களை தேடும் போலீசார்

LATEST NEWS

500/recent/ticker-posts

சென்னை: இளைஞர் வெட்டிக் கொலை: மர்ம நபர்களை தேடும் போலீசார்

பெரும்பாக்கத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி (34), இவர் தேனாம்பேட்டையை சேர்ந்த இவர், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வந்துள்ளார்.

image

இந்நிலையில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், சுந்தரமூர்த்தியை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். தகவலறிந்து சென்ற பெரும்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

image

இதையடுத்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய கொலையாளிகளை பெரும்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments