பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?

LATEST NEWS

500/recent/ticker-posts

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சமான்ய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவந்தனர். இந்நிலையில் கடந்த 40 நாட்களாக விலையில் எந்தவித மாற்றமுமின்றி இருந்தது. இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6ம் குறைக்கப்பட்டுள்ளது.

உலகளவில் பணவீக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், வளர்ந்த நாடுகளிலும் விலையேற்றத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைத்திருக்கிறது. இதனால் மத்திய அரசுக்கு ஒரு நிதியாண்டில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 

முக்கிய நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

  • சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 110.85க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.100.94க்கும் விற்பனையாகிறது.
  • மும்பையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 120.51க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.104.77க்கும் விற்பனையாகிறது.
  • கொல்கத்தாவில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 115.12க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.98.83க்கும் விற்பனையாகிறது.
  • டெல்லியில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 105.41க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.96.67க்கும் விற்பனையாகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/qFKBnDJ
via IFTTT

Post a Comment

0 Comments