தொடர்ந்து அனுமதியின்றி டிஜே நிகழ்ச்சிகள் நடைபெறுகிறதா? - தீவிரமாக கண்காணிக்கும் காவல்துறை!

LATEST NEWS

500/recent/ticker-posts

தொடர்ந்து அனுமதியின்றி டிஜே நிகழ்ச்சிகள் நடைபெறுகிறதா? - தீவிரமாக கண்காணிக்கும் காவல்துறை!

திருமங்கலம் வி.ஆர்.மாலில் அனுமதியின்றி நடைபெற்ற டி.ஜே பார்ட்டியில் கலந்துகொண்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அனுமதியின்றி கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறதா? என சமூக வலைதளங்களை சென்னை காவல்துறை கண்காணித்து வருகிறது.

ஆன்லைன் மூலமாகவும் சினிமா டிக்கெட் புக் செய்யும் செயலிகள் மூலமாகவும் இதுபோன்ற பார்ட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை நடைபெறுவதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலை தளங்களில் தனிநபர்கள் முறையான அனுமதியின்றி ஒருங்கிணைக்கும் பார்ட்டிகள் குறித்த தகவல்கள் மற்றும் டிக்கெட் விற்பனை நடைபெறுகிறதா? என சமூக வலைதளங்களை கண்காணிக்க தொடங்கியுள்ளது சென்னை காவல்துறை. சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் இதனை கண்காணித்து வருகிறது.

image

இதுபோன்று அனுமதியின்றி பார்ட்டிகள் நடைபெறுவதாக பொதுமக்களுக்கு தெரியவந்தால் சென்னை காவல்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை டேக் செய்து புகார் அளிக்கலாம் என சென்னை காவல்துறை கேட்டுகொண்டுள்ளது.

பீச்சு ரிசார்ட்டுகள், நட்சத்திர விடுதிகள் போன்றவற்றில் டிஜே பார்ட்டி, மது விருந்து பார்ட்டி, கேளிக்கை கலைநிகழ்ச்சி பார்ட்டி என பல்வேறு பெயர்களில் தனிநபர்கள் ஒருங்கிணைக்கும் பார்டிகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துவருவதால், இதனை தடுக்கும் விதமாக காவல்துறை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/HWySwXA
via IFTTT

Post a Comment

0 Comments