அமெரிக்கா: 3 வயது மகனை கொலை செய்து ஐஸ் பெட்டியில் வைத்திருந்த தாய் கைது

LATEST NEWS

500/recent/ticker-posts

அமெரிக்கா: 3 வயது மகனை கொலை செய்து ஐஸ் பெட்டியில் வைத்திருந்த தாய் கைது

அமெரிக்காவில் பெற்ற குழந்தையை கொலை செய்து, ஐஸ் பெட்டியில் வைத்திருந்த தாய் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் 31 வயதான அசுராடீ பிரான்ஸ் (Azuradee france) தனது 3 வயது மகன் சாஸ் ஆலன் (Chas allen) உடன் வசித்து வந்தார். அவர்கள் வீட்டிற்கு வந்த ஆலனின் பாட்டி அவன் வீட்டில் இல்லாதது குறித்து  கேட்டபோது, உறவினர் ஒருவரின் வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

image

பாட்டி அங்கு சென்று கேட்டபோது, குழந்தை இல்லை என்பது தெரிய வந்ததுள்ளது. சந்தேகமடைந்த அவர் குழந்தைகள் கண்காணிப்பு அமைப்பிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் அதிகாரிகள் அசுராடீ பிரான்ஸ் வீட்டில் சோதனையிட்டதில், வீட்டின் பாதாள அறையில் இருந்த ஐஸ் பெட்டியில் உறைந்த நிலையில் சாஸ் ஆலனின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து குழந்தையின் தாயை காவல்துறையினர் கைது செய்தனர்.

image

ஆலன் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். குழந்தையின் உடல் குளிர்சாதன பெட்டியில் எவ்வளவு நேரம் இருந்தது அல்லது எப்போது எப்படி இறந்திருக்கலாம் என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே முழுமையாக தெரியவரும். எதற்காக ஆலனை அவரது தாய் செய்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments