
இங்கிலாந்தின் லெஸ்டர்சைர் கவுண்டி கிளப் அணியில் விளையாடும் பும்ராவின் பந்தை விராட் கோலி சிக்சருக்கு விரட்டினார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 1 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அதில் முதலாவதாக வரும் ஜூலை 1-ஆம் தேதி கடந்த வருடம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட 5-வது போட்டியில் இந்தியா களமிறங்குகிறது.

இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தின் உள்ளூர் அணியான லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 4 நாட்கள் பயிற்சி டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை துவங்கியது. இந்தியாவை சேர்ந்த நட்சத்திரங்கள் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்னா, ரிஷப் பண்ட் மற்றும் மூத்த வீரர் செடேஸ்வர் புஜாரா ஆகியோர் எதிரணியான லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாட முன்வந்தனர்.

இப்போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி பொறுமையாக விளையாடி 69 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 2வது இன்னிங்சில் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 98 பந்துகளில் 67 ரன்கள் அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்சரும் அடங்கும். குறிப்பாக எதிரணியில் விளையாடும் பும்ராவின் பந்தை விராட் கோலி சிக்சருக்கு விரட்டினார். இதனால் பும்ரா அதிர்ச்சி அடைந்தார். இறுதியில் பும்ரா பந்துவீச்சில் விராட் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தாலும், இந்த பயிற்சி ஆட்டத்தில் கோலி ஃபார்முக்கு திரும்பியிருப்பதை காண முடிந்தது. மேலும் இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட், கே.எஸ். பரத் ஆகியோரும் அரைசதம் கடந்தனர்.
இதையும் படிக்கலாம்: ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு - இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/DifJjA2
via IFTTT

0 Comments