பூந்தமல்லியில் போலீஸ் எனக் கூறி திருமணம் செய்து ஏமாற்றியதாக மனைவி அளித்த புகாரையடுத்து கணவர் கைது செய்யப்பட்டார்.
வேலூரைச் சேர்ந்தவர் தினகரன் (32), இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிவேதா (26), என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து தற்போது பூந்தமல்லியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், தனது கணவர் போலீஸ் எனக் கூறி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெ பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் வழக்குப்பதிவு செய்து தினகரனை பிடித்து விசாரித்தனர். அப்போது தினகரன் போலீஸ் இல்லை என்பதும், போலீஸ் போன்று போலியான அடையாள அட்டையை வைத்து கொண்டு உயர் அதிகாரி ஒருவருக்கு வாகனம் ஓட்டுவதாகக் கூறி ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தினகரனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து போலி போலீஸ் அடையாள அட்டையை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் போலீஸ் வேலை வாங்கித் தருவதாக தினகரன் பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாகவும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் வீட்டிற்கு வந்து கேட்டதையடுத்து தினகரன் போலீஸ் இல்லை என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments