'லீக்' ஆன கூகுளின் ரகசியங்கள்... இன்ஜினியரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை!

LATEST NEWS

500/recent/ticker-posts

'லீக்' ஆன கூகுளின் ரகசியங்கள்... இன்ஜினியரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு பற்றிய ரகசிய தகவல்களை கசியவிட்ட அந்நிறுவனத்தின் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டுக் குழுவில் மென்பொருள் பொறியாளராக இருப்பவர் பிளேக் லெமோயின். அதோடு இவர் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்ஃபாபெட் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிளேக் லெமோயின் சமீபத்தில் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், கூகுளின் செயற்கை நுண்ணறிவு பற்றிய ரகசிய தகவல்களை பகிரங்கமாக தெரிவித்தார்.

image

இதனைத்தொடர்ந்து கூகுளின் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக பிளேக் லெமோயின் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பற்றிய மேலும் சில ரகசிய தகவல்களை அவர் வெளியிட்டு வந்தார். இதனைத்தொடர்ந்து கூகுளின் பாதுகாக்கப்பட்ட தகவல்கள் மற்றும் திட்டங்களை மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொண்டதற்காக பிளேக் லெமோயினை பணியிடை நீக்கம் செய்து கூகுள் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதையும் படிக்கலாம்: இதுதான் யூடியூபில் அப்லோடு ஆன முதல் வீடியோ

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments