சென்னை: இரவு நேரங்களில் பைக்கில் சென்று வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

LATEST NEWS

500/recent/ticker-posts

சென்னை: இரவு நேரங்களில் பைக்கில் சென்று வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

சென்னையில் கடந்த 18-ம்தேதி தொடர் நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் நேற்று (ஜூன் 25-ம் தேதி இரவு) கைது செய்துள்ளனர்.

சென்னையில் ராஜமங்கலம், அயனாவரம், தலைமைச் செயலக காலனி போன்ற பகுதிகளில் கடந்த 18-ம்தேதி பெண்களிடம் தொடர் வழிப்பறி மூலம் 19 சவரன் தங்க நகைகள் பறிப்பு சம்பவங்கள் நடந்தது. இது தொடர்பாக வழிப்பறி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி 2 வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்துள்ளனர்.

image

புழல் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு மற்றும் அபினேஷ் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இன்று (24.06.2022) இரு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். வழிப்பறி செய்த தங்க நகைகள் இதுவரை பறிமுதல் செய்யப்படவில்லை.

-செய்தியாளர்: சுப்பிரமணியன்

இதையும் படிங்க... `பிஎஸ்பிபி சேர்க்கைக்கு லட்சங்களில் லஞ்சம்’ குற்றச்சாட்டு: மதுவந்தி தரப்பு எதிர் புகார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments