சினிமா துணை நடிகர் மீது பாய்ந்த போக்சோ - இருவருக்கு ஆயுள் தண்டனை

LATEST NEWS

500/recent/ticker-posts

சினிமா துணை நடிகர் மீது பாய்ந்த போக்சோ - இருவருக்கு ஆயுள் தண்டனை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சினிமா துணை நடிகர் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மதுரையை அடுத்த சோழவந்தான் முள்ளிப்பள்ளம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பக்தன் என்கிற நாச்சியப்பன் (49). இவர் எலி உள்ளிட்ட சினிமா படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் துணை நடிகராக நடித்துள்ளார்.

image

இந்நிலையில், இவர் ஒரு சிறுமியை ஏமாற்றி மிட்டாய் மற்றும் பலகாரம் வாங்கிக் கொடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை பார்த்த தென்கரையைச் சேர்ந்த டிரைசைக்கிள் ஓட்டுநர் மணிகண்டன் (28) என்பவரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில் சோழவந்தான் போலீசார் வழக்குபதிவு செய்து பக்தன் என்கிற நாச்சியப்பன் மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.

image

இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ஜான்சி ஆஜரானார். விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்ட நாச்சியப்பன், மணிகண்டன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்பளித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments