மதுரை: தண்ணீர் தொட்டியில் வீசப்பட்டு பச்சிளம் குழந்தை கொலை; போலீஸ் விசாரணை

LATEST NEWS

500/recent/ticker-posts

மதுரை: தண்ணீர் தொட்டியில் வீசப்பட்டு பச்சிளம் குழந்தை கொலை; போலீஸ் விசாரணை

திருப்பரங்குன்றத்தில் 38 நாட்களான கைக் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் மேட்டுத்தெருவை சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜா - சித்ரா தம்பதியினருக்கு ஏற்கெனவே 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 38 நாட்களுக்கு முன்னர் 3வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பிறந்து 38 நாட்களான கைக் குழந்தையை தூங்க வைத்துவிட்டு மற்ற இரு குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வர வெளியே சென்ற தாய் சித்ரா, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

image

இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினரிடம் சொல்லி குழந்தையை தேடி பார்த்தபோது அருகில் உள்ள வீட்டின் மாடியின் உள்ள தண்ணீர் தொட்டியில் கைக் குழந்தை சடலமாக மிதந்துள்ளது. இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டு அங்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர். தண்ணீர் தொட்டிக்குள் கைக் குழந்தையை வீசி கொலை செய்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

image

பிறந்து 38 நாட்கள் ஆன கைக் குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

- செய்தியாளர்: கணேஷ்குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments