திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. ஓராண்டில் திமுக ஆட்சி குறித்த கருத்துக்கணிப்பை புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தியது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், தலைமையின் செயல்பாடுகள் மற்றும் மக்களை கவர்ந்த திட்டங்கள் என்னென்ன? மக்களுடைய மதிப்பீடு என்னென்ன? என்பது குறித்த கேள்விகளும், எதிர்க்கட்சிகளுடைய செயல்பாடுகள் எப்படியிருக்கின்றன? எந்தெந்த தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இருக்கிறது? இளைஞர்கள் மத்தியில் எந்தெந்த தலைவர்களுக்கு ஆதரவு இருக்கிறது என்பது குறித்த தகவல்களும் இந்த கருத்துக்கணிப்பில் இடம்பெற்றுள்ளன.
மேலும் மக்கள் இந்த அரசுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் வழங்கியுள்ளனர் என்பது குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் பலம் என்ன? என்ற கேள்விக்கு புதிய தலைமுறை நடத்திய கருத்துக்கணிப்பில் மக்கள் அளித்த பதில்கள்
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் - 34.88%
கொரோனா நிவாரணம் ரூ. 4,000 - 12.75%
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - 11.90%
கடின உழைப்பும், எளிதாக அணுகும் வாய்ப்பும் - 8.60%
மிகப்பெரிய ஊழல் புகார்கள் இல்லாமை - 6.56%
இல்லம் தேடி மருத்துவம் திட்டம் - 2.66%
பிற கருத்துகள் - 12.49%
தெரியாது - 10.16%
கொரோனா பேரிடரை திமுக அரசு எப்படிக் கையாண்டது? என்ற கேள்விக்கு புதிய தலைமுறை நடத்திய கருத்துக்கணிப்பில் மக்கள் அளித்த பதில்கள்:
சிறப்பாக கையாண்டது - 46.22%
மேலும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம் - 28.54%
அதிமுக சிறப்பாகக் கையாண்டது - 14.49%
பிற கருத்துகள் - 5.26%
கூற இயலாது, தெரியாது - 5.49%
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/ejKOJWB
via IFTTT
0 Comments