
அமெரிக்காவில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரும் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில் அங்கு மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கிரீன்வுட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் உணவு விடுதிகள் அமைந்த பகுதியில் துப்பாக்கியுடன் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 2 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு வந்த மற்றொரு நபர், சம்பவம் பற்றி அறிந்தவுடன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மர்ம நபரை நோக்கி சுட்டார். இதில், மர்ம நபர் உயிரிழந்து உள்ளார். இதனால் மொத்த உயிரிழப்பு 4 ஆக உள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாராத்தை கட்டுப்படுத்தும் வகையில் அண்மையில் புதியதொரு சட்டத்தை அந்நாடு முன்மொழிந்தது. இதற்கு அமெரிக்க மேல் சபையான செனேட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தற்போது மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் அங்கு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்கலாம்: பெண் குழந்தைக்காக பெண்ணுக்கு ஆசிட் கொடுத்த பெண்.. கணவருக்கு காப்பு.. அசாமில் பயங்கரம்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/eoVsQM7
via IFTTT

0 Comments